Saturday, June 11, 2011

மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம் பாகம்: 2



இந்த வருடம் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கான விண்ணப்பித்தோர் 21000 பேர்.
கடந்த ஆண்டை விட அதிகமானோர் மருத்துவம் பயில ஆர்வமாக இருப்பது தெரிகிறது. ரேங்க் பட்டியல் ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பித்தோர் அனைவருக்கும் ஏதாவது ஒரு கல்லூரியில் இடம் கிடக்குமா என ஆவலுடன் இருப்பது புரிகிறது. அதனால் கடந்த ஆண்டின் கட் ஆப் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. அதில் ஒவொரு பிரிவிலும் அரசு கல்லூரியில் இறுதி கட் ஆப், தனியார் கல்லூரியில் இறுதி கட் ஆப், அவர்களின் ரேங்க், மொத்தம் இடம் கிடைத்த மாணவ்ர்களின் எண்ணிக்கை ஆகியவை தரப்பட்டுள்ளது.


RANK
COM
MARK
COM_RANK
COLLEGE
GOVT/PVT
Total Seats
823
OC
196.50

G.M.K.M.C., SALEM
G
64
1,798
OC
194.25

TAGORE M.C., VANDALUR
P
49
1,239
BC
195.50
786
T.M.C., THIRUVARUR
G
766
1,930
BC
194.00
1,230
TAGORE M.C., VANDALUR
P
267
2,004
BCM
194.00
76
T.M.C., THIRUVARUR
G
73
2,629
BCM
192.75
102
TAGORE M.C., VANDALUR
P
19
2,319
MBC
193.25
425
T.M.C., THIRUVARUR
G
419
3,237
MBC
191.50
637
MOOGAMBIGAI M.C., KULASEKARAM
P
111
4,681
SC
188.50
272
T.M.C., THIRUVARUR
G
267
6,368
SC
184.75
480
TAGORE M.C., VANDALUR
P
83
6,128
SCA
185.25
55
T.M.C., THIRUVARUR
G
56
9,598
SCA
175.25
130
TAGORE M.C., VANDALUR
P
17
8,043
ST
180.25
18
T.M.C., THIRUVARUR
G
18
10,751
ST
171.25
45
MOOGAMBIGAI M.C., KULASEKARAM
P
6

ஆனால் இதே ரேங்க்கிற்கு இந்த வருடம் இடம் கிடைப்பது கொஞ்சம் சிரமம். இந்த ஆண்டு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சதம் எடுத்தவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. அதான் கட் ஆப் உயரும் என தெரிகிறது.

Tentative Medical Cut off IN Govt Colleges

2011
2010
Gen
198.75
197.25
BC
197.50
195.50
MBC
195.25
193.25
SC
190.00
188.50
ST
186.75
184.75




இந்த அட்டவணை உங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் என நினக்கிறேன். வாழ்த்துக்கள் வருங்கால மருத்துவர்களே.

Saturday, May 14, 2011

மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம்



மருத்துவம் பயில எப்பொழுதுமே மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதுவும் இந்த ஆண்டு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சதம் எடுத்தவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இருப்பினும் உங்களுக்கென்று கல்லூரியில் ஒரு இடம் உள்ளது.

அரசு கல்லூரியில் இடங்கள்:
SNO
NAME
TOTAL
1
M.M.C., CHENNAI
140
2
S.M.C., CHENNAI
127
3
M.M.C., MADURAI
132
4
T.M.C., THAN AVUR
127
5
K.M.C., CHENNAI
85
6
C.M.C., CHENGALPET
43
7
T.M.C., TIRUNELVELI
127
8
C.M.C., CQIMBATQRE
128
9
G.M.K.M.C., SALEM
64
10
K.A.P.V., TRICHY
85
11
T.M.C., THQQTHUKUDI
85
12
K.M.C., KANYAKUMARI
85
13
V.M.C., VELLQRE
85
14
T.M.C., THENI
85
15
D.M.C., DHARMAPURI
85
16
V.M.C., VILLUPURAM
85
17
T.M.C., THIRUVARUR
85
TOTAL
1,653


  தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள 1,945 இடங்களில் அகில இந்திய அளவிலான ஒதுக்கீட்டில் 292 இடமும், மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் 1.653 இடங்களும் பகிர்ந்து கொள்ளப்படும். தனியார் சுய நிதி மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 1010 இடங்ககளில், மானேஜ்மென்ட்( நிர்வாக ரீதியானது) வகைக்கு 375 இடங்களும், மீதி 635 மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் பகிர்ந்து கொள்ளப்படும்

இந்த வருடம் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரியிலும் கிடைக்கும். விண்ணப்பம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு இலவசம். மற்ற பிரிவு மாணவ-மாணவிகள் ரூ.500-க்கு செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம் சென்னை-10 என்ற முகவரியில் ஏதாவது அரசு உடைமையாக்கப்பட்ட வங்கியில் எடுக்கவேண்டும். பின்னர் அதை கொடுத்து விண்ணப்பம் பெறவேண்டும். 


கட்டண விலக்கு அளிக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள் உண்மை நகல் என்று சான்றொப்பம் செய்யப்பட்ட சாதி சான்றுடன் பிளஸ்-2 மதிப்பெண் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சமர்ப்பித்து விண்ணப்பத்தை பெறலாம்.

விண்ணப்பம் ஜுன் 2-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அன்றுதான் (ஜுன் 2-ந்தேதி) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாளாகும். விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

பிளஸ்-2 மார்க்குகள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் ஜுன் 21-ந்தேதி வெளியிடப்படும்.

மருத்துவ கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடைபெறும். கவுன்சிலிங் ஜுன் 30-ந்தேதி தொடங்குகிறது.


Completed Application Form should reach: -

THE SECRETARY,
SELECTION COMMITTEE,
162, E.V.R. PERIYAR SALAI,
KILPAUK, CHENNAI – 600 010.

on or before 02 – 06 – 2011 by 5.00 p.m

For Further Information See the Web site: www.tnhealth.org




பிளஸ் 2 விடைத்தாள் அச்சு நகல்



தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் (மே 9-ம் தேதி) மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் நிலவி வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் வாய்ப்பு உள்ளது. சில பாடங்களில் கூடுத்ல் மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும் என எண்ணுபவர்கள் நகல, மறு கூட்டல் , மறு மதிப்பீடு ஆகியவற்றுக்கு மே 11-ம் தேதி முதல் 16 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்:
1.       முதன்மைக் கல்வி அலுவலகங்கள்
2.       மாவட்ட கல்வி    அலுவலகங்கள்
3.       தேர்வுத் துறை மண்டல இயக்குனர் அலுவலகங்கள்
4.       தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம்.

கட்டணம்:
நகல பெற: மொழிப்பாடங்கள் : ரூபாய் 550/- 
(முதல் மற்றும் இரண்டாம் தாள் சேர்த்து)
இதர பாடங்கள்:                          ரூபாய் 275/-

Demand Draft: Director of Government Examinations, Chennai – 6
From any nationalized Banks.
DD should be Payable at Chennai. 

மேலே குறிப்பிட ஏதாவது ஒரு அலுவலகத்தில் டிராப்ட் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்று சரியாக பூரத்தி செய்து அனுப்ப வேண்டும். மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நகல்கள் நேரடியாக வீட்டிற்கே வந்துவிடும். நகல்களைப் பார்த்து, கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதினால் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மறு கூட்டளுக்கென   தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை.

மறு கூட்டல் கட்டணம்:
மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல்:  ரூபாய் 305/- (ஒவ்வொரு பாடத்திற்கும்)
இதர பாடங்கள்:                      ரூபாய் 205/- (ஒவ்வொரு பாடத்திற்கும்)

மறு மதிப்பீடு:
ஒவ்வொரு பாடத்திற்கும்: ரூபாய் 505/-
(நகல பெற்ற மாணவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்)
குறிப்பு: சரியான கட்டணத்திற்கு அலுவலக சுற்றறிக்கையைப் பார்க்கவும் 




Students to get your results from the following websites:
http://www.collegesintamilnadu.com/results/Tamil-Nadu-Exam-Results-Index.asp

Saturday, May 7, 2011

அன்னையர் தினம்


அன்னையர் தினம்.
அன்னையர் தினம் எனும் போதினிலே
பாசத்தின் சுவை ஊறுதென் உள்ளத்திலே
அழியா நினைவுகள் நெஞ்சினிலே
அன்னையைப் போற்றுது அனுதினமும் . .

அம்மா... இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்... அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் 'அன்னை' என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

            "தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை!!!"

'தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஏழைக்கும், பணக்காரனுக்கும் கடவுள் சமமாக கொடுத்த வரம்... அன்னை. அன்னையிடம் மட்டும் தான் பேதமில்லாத அன்பை காணமுடியும். ஒற்றைப் பிள்ளை பெற்றாலும், பத்துப் பிள்ளை இருந்தாலும், அங்கே அன்பு மாறுவதில்லை. கருவறையில் சுமக்கும் போதே, பிள்ளையின் கனவுகளையும் சுமந்து, காலம் முழுதும் பிள்ளைக்காகவே வாழும் உன்னத சொர்க்கம் அவள்.

குறள்:
தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.

விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்