Sunday, November 11, 2012

தீபாவளி நல்வாழ்த்துகள்!





தீபாவளி பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும். தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், குறிப்பாக - பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான். 





கூடுமானவரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம். அப்படி மீறி பட்டாசு வெடித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.



அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான
ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

Sunday, August 19, 2012

இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.

எந்தச் சுவையும் அருகில் இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியவர்க்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ஈதுல்' பெருநாள் இந்நாள்.



நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

இறைவனுக்காக  இந்த நோன்பு  இருக்க நேர் வழி வாழ பாதை காட்டும் இந்த புனித  மாதத்தின் முடிவில் ரம்ஜான் கொண்டாடும்  அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள் 


Monday, May 21, 2012

வெற்றி உங்கள் பக்கம்


மே 22-ல் தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்

 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்கள் வழியாக பார்க்கலாம்.

·         http://tnresults.nic.in/
·         http://dge1.tn.nic.in
·         http://dge2.tn.nic.in
·         http://dge3.tn.nic.in 




அல்லது முடிவுகளை மொபைல் மூலமும் பெறலாம்.
உங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் கொடுத்து எஸ்.எம்.எஸ் வழியாக பதிவுசெய்து கொள்ளவும். முடிவுகள் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.

உங்கள் செய்தி இதுபோல் இருக்க வேண்டும்: tnboard12 123456,01/04/1995
செய்தி அனுப்பவேண்டிய எண்:   +919282232585.
இங்கே 123456 என்பது ஆறு இலக்க உங்கள ப்ளஸ் 2 பதிவு எண், 01/04/1995 என்பது பிறந்த தேதி.

Sunday, May 20, 2012

உங்கள் கல்லுரியை தேர்வு செய்யுங்கள்


2011-ம் ஆண்டு பொறியியல் கட்-ஆப் மதிப்பெண்கள்:

வருகின்ற 22-ம் தேதி காலை 11 மணிக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகள் எப்படி இருக்குமோ, மதிப்பெண்கள் எவ்வளவு கிடக்குமோ என்ற கவலை மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான “கட் – ஆப் மதிப்பெண் கூடுமா குறையுமா என்ற தவிப்பில் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.  

கடந்த ஆண்டு , "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்களை, அண்ணா பல்கலை, தனது இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது. கல்லூரி வாரியாக, பாடப்பிரிவுகள் வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.

மாவட்டத்தை தேர்வு செய்தால், அம்மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் தெரிய வரும், பின்னர் இந்த ஆண்டு சேர உள்ள கல்லூரியை தேர்வு செய்து, வகுப்பு விபரத்தை குறிப்பிட்டால், அனைத்து பாடங்களுக்கான "கட்-ஆப்' மதிப்பெண்கள் கிடைக்கும். இதனை வைத்துகொண்டு, இந்த ஆண்டு நிலவரம் எப்படியிருக்கும் என்பதை, ஓரளவுக்கு மாணவர்களும், பெற்றோரும் யூகிக்கலாம்.

இங்கே கிண்டி பொறியியல் கல்லூரியின் மதிப்பெண்களை எப்படி பெறுவது என்றும், அதன் விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

Minimum cut-off 2011 
1. UNIVERSITY DEPARTMENTS OF ANNA UNIVERSITY - CEG CAMPUS  
CHENNAI 
Community – BC

Branch Name
OC
BC
MinimumCut-off
Minimum Cut-off
AGRICULTURE AND IRRIGATION ENGG.(SS)
194.75
192.75
BIO MEDICAL ENGG(SS)
197.50
196.67
CIVIL ENGINEERING
199.00
198.75
COMPUTER SCIENCE AND ENGG.(SS)
199.25
199.00
COMPUTER SCIENCE AND ENGG.
199.75
199.50
ELECTRONICS AND COMM ENGG.
200.00
199.75
ELECTRICAL AND ELEC. ENGG.
199.50
199.00
ELECTRONICS & COMM ENGG(SS)
199.50
199.25
GEO-INFORMATICS
197.25
196.50
INDUSTRIAL ENGINEERING
197.75
197.25
INFORMATION TECHNOLOGY(SS)
198.50
198.25
MATERIALS SCIENCE AND ENGG.(SS)
197.00
196.50
MECHANICAL ENGINEERING
199.67
199.25
MINING ENGINEERING
197.00
196.50
MANUFACTURING ENGINEERING
198.50
198.00
PRINTING TECHNOLOGY
195.25
194.25
CIVIL ENGINEERING - TAMIL MEDIUM
180.00
171.75
MECHANICAL ENGINEERING - TAMIL MEDIUM
182.25
173.00


மேலும் தெரிந்துகொள்ள: http://tancet.annauniv.edu:8080/cutoff2011/cutoff2011.html


Thursday, May 17, 2012

மனிதாமான மிக்க மருத்துவர்



கால்நடை மருத்துவ படிப்பில் சேர மே m14-ம் தேதி (14-05.2012) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஜுன்   18-ம் தேதி (18-06-2012) கடைசி நாள்.
 தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு வருடந்தோறும் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. அதன்படி இந்த ஆண்டும் அங்கு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 22-ம் தேதி (22-05-2012) வெளியிடப்படுகிறது. இருப்பினும் அதற்கு முன்னதாக மே m14-ம் தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்ப படிவங்கள் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி மீன் வளக் கல்லூரி, மதுரை, கோவை, திருச்சி, ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களில் கிடைக்கும். விண்ணப்பங் கள் ஜுன் 15-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜுன் 18-ம் தேதி கடைசி நாள்.

மாணவர்சேர்க்கை பற்றிய இதர விவரங்கள் காண:            http://www.tanuvas.tn.nic.in/ugadmin.html