Saturday, October 31, 2015

Alternate train accommodation scheme

Wait listed passengers to get confirmed berth under 'Vikalp'
Railway is launching a new scheme on Sunday under which waitlisted passengers can get confirmed accommodation in next alternative train if they opt for the option while booking their tickets online. 

Known as Vikalp, the alternative train accommodation scheme will take off in trains running on Delhi-Lucknow and Delhi-Jammu sectors from November 1, on a pilot basis. 

Initially, Vikalp scheme will be available only for the tickets booked through internet for six months and option will be limited to mail and express trains on the two selected routes, said a senior Railway Ministry official.

As per the scheme, waitlisted passengers of a train would be given option of getting confirmed accommodation in the next train running on the route. 

Railway aims to achieve the twin objectives of providing confirmed accommodation to waitlisted passengers and ensure optimal utilisation of available accommodation by this scheme.

While there is a huge demand for train berths in certain sector round the year, some routes witness increased rush during festive season. 


Describing the scheme as a "passenger friendly" move to provide confirmed accommodation to waitlisted passengers in alternative trains, the official said, the scheme will be extended to reservation booking counters and also on other routes after getting the feedback.

Passenger, if opts for the Vikalp scheme while booking tickets online, will get SMS alert on their mobile phone about getting confirmed accommodation in alternative train.

As per the scheme, there would be no extra charges taken from the passenger or any refund provided for the difference of fare. 

The name of passenger who has been provided accommodation in the alternative train will not figure in the waitlisted charts of their original train, the official said, adding a separate list of passengers transferred in alternative train will be pasted along with the confirmed and waitlist charts. 


---PTI | New Delhi | October 31, 2015

Tuesday, May 6, 2014

தீர்வல்ல தற்கொலை!



'ன் உயிரே என் குழந்தைங்கதான்!' - இதைவிட எளிதாக ஒரு தாயால், பெற்ற குழந்தைகளின் மீதான பாசத்தையும் நேசத்தையும் சொல்லிவிட முடியாது. ஆனால், உயிராய் வளர்க்கும் குழந்தைகளையும் தவிக்கவிட்டு, தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சில தாய்மார்களின் அவலம், தினசரி செய்தியாகி அதிரவைக்கிறது. நொடியில் எடுக்கும் முடிவு, அந்தக் குடும்பத்தையே உலுக்கி போட்டுவிடுகிறது.

குடும்பம் என்ற அமைப்பு எத்தனை வலிமையானது என்பதைச் உணர்த்துவது, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களும் வலியான நிமிடங்களும்தான்..

''தற்கொலைக்கான காரணங்களில் 25 சதவிகிதம், குடும்பப் பிரச்னைகள்தான் என்கிறது ஓர் ஆய்வு. சொத்துப் பிரச்னை, கடன் பிரச்னை, காதல் பிரச்னை, தம்பதிக்குள் பிரச்னை, ஏதோ ஓர் அசம்பாவிதம் நடந்து, அதனால் மானப் பிரச்னை என்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள்தான் தற்கொலைக்கான காரணங்கள். தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும்கூட பெற்றோரின் திட்டுகளுக்குப் பயந்துதான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஒருவர் எடுக்கும் தவறான முடிவு அவரோடு முடிந்துவிடாது. அவர் குடும்பத்துக்கும் அதே அதிர்ச்சி இருக்கும். அதிலும், தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்து மீண்டு வந்தவர்களுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். 'எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சேஎன்ற அவமானம், குற்ற உணர்வு ஒரு புறமும், 'எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுதலைனு நினைச்சோம்... இதிலும் தோத்துப் போயிட்டோமேஎன்ற மன அழுத்தம் மறுபுறம் இருக்கும்!

*     குடும்பத்தினர்

'நாம நல்லாத்தானே வைச்சிருந்தோம். எவ்வளவு பாசத்தைக் கொட்டி வளர்த்தோம்? இப்படிப் பண்ணிட்டானே... நம்மகிட்ட ஒரு முறை பேசியிருக்கலாமே... இப்படி ஒரு முடிவு எடுத்து, எல்லார் முன்னாலயும் தலை குனியவைச்சிட்டானே!என்று குடும்பத்தினர் மத்தியில் கோபமும் ஆதங்கமும் உண்டாகும்.

தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்து வந்தால்... ''நல்லவேளை பிழைச்சு வந்தது... செத்துப் போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?'' என்ற ஆதங்கத்தில் சில நேரம் அன்பாகவும், சில நேரம் ''ஏன் இப்படிப் பண்ணனும்?'' என்று கோபமாகவும் நேர் மற்றும் எதிர்மறை உணர்வுகள் மாறிமாறி குடும்பத்தாரிடமிருந்து வெளிப்படும்.

தற்கொலைக்கு முயன்றவர், குடும்பத்தை வெறுத்துத்தான் அந்த முடிவுக்குச் சென்றார் என்று நினைக்காமல், அவர் மனதிலுள்ள வலி எவ்வளவு ஆழமானது என்று புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

*     தனிமையும் தற்கொலையை தூண்டும்

நம் குடும்ப அமைப்பில், பிள்ளைகளுக்கு பக்கபலமாக, பின்புலமாக குடும்பமே இருக்கிறது. குடும்பத்திலேயே பிரச்னை என்றால், பாதிக்கப்பட்ட நபர் எங்கே செல்வார்? முன்பு கூட்டுக் குடும்பமாக இருந்ததால், அம்மா அப்பாவிடம் பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் உறவினர்களிடம் பேசி ஆறுதல் அடைய முடிந்தது. ஆனால் இன்றோ தனிக்குடித்தனம்... யாரிடம் மனம் விட்டுப் பேசுவது, பகிர்வது என்று தெரியாமல், சோகத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனிமையில் சிந்திக்கும்போது தற்கொலை எண்ணம் தலைதூக்க வாய்ப்பாகிவிடுகிறது.
தற்கொலைக்கு முயன்றவர்களைப் பார்த்து, 'வேணும்னே இப்படிப் பண்ணிட்டான்!'' என்று குடும்பத்தினர் சொல்வது சகஜம். வேறு வழி தெரியாமல்தான் செய்திருக்கிறான் என்று புரிந்துகொள்ளுங்கள்.  

*     தற்கொலைக்கு முயன்றவருக்கு...

நொடிப் பொழுதில் ஏற்படும் உணர்ச்சியின் வெளிப்பாடுதான்,  தற்கொலை முயற்சி. அந்த நேரத்தில் எப்படி அதைக் கட்டுப்படுத்துவது என்பதை முதலில் சொல்லித்தருகிறோம்.

உள்ளுக்குள் அடக்கி வைத்திருக்கும் அழுத்தம், ஏதேனும் ஒரு வகையில் வெளியே வந்துவிட்டால், பிரச்னை இருக்காது.  டென்ஷன் இல்லாதபோது, பிரச்னைக்கான தீர்வுகள் புலப்படும்! ஆனால், அழுத்தம் வெளியே வர எந்த வழியும் இல்லாதபோது, வெடிக்கத்தானே செய்யும்.

பிடிக்காத விஷயங்கள் ஏதேனும் நடந்தாலோ, பயமாக இருந்தாலோ, அதைச் சொல்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. வாழ்வில் எத்தனையோ ஆயிரம் பிரச்னைகள் வரும்... விலகும். ஆனால், எல்லாவற்றுக்கும் தற்கொலை மட்டுமே தீர்வு இல்லை. தற்கொலை தவிர்த்து, பிரச்னைகளுக்கு வேறு தீர்வுகளும் சாத்தியக்கூறுகளும் என்னவெல்லாம் இருக்கின்றன என்று எடுத்துச் சொல்லப்படுகிறது.

*     நான்கு பேர் நல்லது!

'நல்லது கெட்டதுக்கு நாலு பேர் வேணும்என்று பெரியவர்கள் சொல்வார்கள். மனதில் சுமையும் அழுத்தமும் ஏறி, திடீரென ஒருநாள் வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லிப் பகிர்ந்துகொள்ள, அனைவருக்குமே 'நான்கு பேர்முக்கியம். குடும்பத்தில் ஒருவர், குடும்பத்துக்கு வெளியே ஒருவர், நண்பர்களில் ஒருவர், அலுவலகத்தில் ஒருவர் என்று நம்பிக்கையாக நான்கு பேர் இருந்தால் போதும். தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.  


பெரும்பாலானவர்களை தற்கொலை நிலைக்குத் தள்ளுவதும் குடும்பம்தான்; மீட்டெடுப்பதும் குடும்பம்தான். குடும்பத்தில் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்து, வாழவைப்போம்!''

-நன்றி டாக்டர் விகடன், 16.05.2014

உல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்!

நோ டென்ஷன்

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  திட்டமிடுதல்தான் டென்ஷனைக் குறைக்கும். போகும் ஊர்களைப் பற்றிய விவரங்கள், எந்த நேரம் போவது வசதி, சுவாரஸ்யத் தகவல்களை சேகரித்துக்கொள்ளுங்கள். அரிய ஊர்களுக்குப் போயும், முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியாமல் போகும்போது, மனச் சோர்வடைய நேரிடலாம்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  தொலைதூரப் பயணங்களுக்கு, முடிந்த வரை காரில் செல்வதைத் தவிர்த்து ரயிலில் செல்வது பாதுகாப்பானது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  வெளியூருக்குக் கிளம்பும் முன்பு, கேஸ் இணைப்பு, மின் இணைப்பைத் துண்டிருத்திருக்கிறோமா, குழாய்களை மூடி இருக்கிறோமா, கதவைப் பூட்டியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபாருங்கள். இல்லையெனில், பயணிக்கும்போது, பலவித சந்தேகங்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதுவே மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

மிதமான உணவு

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  அந்தந்த ஊருக்கு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதை சுவைத்துப் பார்ப்பது வித்தியாச அனுபவம் என்றாலும், வழக்கத்தைவிட சற்றுக் குறைவாகவே எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிடுவதால் வாந்தி, அஜீரணம், வயிற்றுப்போக்கு வருவதைத் தவிர்க்கலாம்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg   அலைச்சலால், உடலில் உள்ள நீர்ச்சத்து பெருமளவு இழக்கப்படும். அதிகப்படியான நீர் இழப்பால் நா வறட்சி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் வரலாம். வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, பழங்களைச் சாப்பிட்டும் நீர் இழப்பை ஈடு செய்யலாம். காய்ச்சி வடிகட்டிய நீரை அதிகம் அருந்துவது பாதிப்பிலிருந்து மீள வழி செய்யும்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  சிலருக்கு வண்டியில் ஏறிய சிறிது நேரத்திலேயே, வாந்தி, மயக்கம், வயிற்றுப் புரட்டல் ஏற்படலாம்.  இஞ்சித் துண்டுடன், சீரகத்தூள், உப்புத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து எடுத்துச் செல்லுங்கள்.  
http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg   காலை 11 மணி அளவில் இளநீர், நீர் மோர் அருந்துவது நல்லது.  மதிய நேரத்தில் சாப்பாட்டுடன் வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் சேர்த்த ரைத்தா, பச்சடி சாப்பிட்டால் உடலும் வயிறும் கூலாக இருக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg   ஆங்காங்கே கூல்டிரிங்ஸ் வாங்கி குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். சர்க்கரை சேர்த்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர் அருந்துவது நீர்க் கடுப்பு, நீர்ச் சுருக்கு வராமல் தடுக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  எங்கு உணவு சாப்பிட்டாலும், வெந்நீரைப் பருகுங்கள். வெந்நீர் தொண்டையைப் பாதிக்காது. சளி பிடிக்காது. மினரல் வாட்டரைவிடச் சிறந்தது. செலவும் மிச்சம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  எண்ணெய், மசாலா உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற வெந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இதனால், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் பிரச்னை இருக்காது.   

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பெரும்பாலும் அசைவ உணவைத் தவிர்த்து, சைவ உணவு அதுவும் இயற்கை உணவுதான் பெஸ்ட். வயிற்றுப் பொருமல், அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.
மாசுக்களிலிருந்து தப்பிக்க...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg அதிகப்படியான தூசுக்களால் தலைமுடியும், சருமமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். முடி உதிர்வது, வலுவிழத்தல், சிக்கு படிதல், பொலிவிழந்து போகும். வழக்கமாக பயன்படுத்தும், தரமான ஷாம்பு, கண்டிஷனர்களை கையோடு எடுத்துச் செல்லுங்கள்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பனி பொழியும் இடங்களில் தலைக்கு ஸ்கார்ஃப் அணியலாம். சிலர் வெயிலில் செல்லும்போதும் தலைக்கு ஸ்கார்ஃப் போடுவார்கள்.  இதனால், தலையில் சிலருக்கு அதிகம் வியர்க்கும், முடி உதிரும். இவர்கள், ஸ்கார்ஃப் அணிவதைத் தவிர்த்து, காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளலாம். பயணத்தைத் தொடங்கும் முன்பு தலைக்கு நன்றாகக் குளித்துவிட்டு, முடி காய்ந்ததும் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யலாம். வண்டியில் பயணிக்கும்போது, தலைமுடி பறப்பதையும், தூசுக்கள் படிவதையும் தவிர்க்கலாம்.

உடல் உஷ்ணம் குறைய...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg எண்ணெய், அதிகக் கடினப் பொருட்கள் மசாலாக்கள் சேர்த்த உணவுகளை சாப்பிடுவதாலும் அஜீரணம், வாயுத் தொல்லை ஏற்படும். வாயுத் தொல்லையாலும், ஓய்வின்றி ஊர் ஊராகச் செல்வதாலும்கூட உடல் உஷ்ணம் அதிகரிக்கலாம். உடனடியாக ஜீரணக்கோளாறைச் சரிசெய்வது நல்லது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg தலையில் தேங்காய் எண்ணெயைத் தடவி தலைக்குக் குளிப்பதன் மூலம் உஷ்ணம் தாக்காமல் காக்கலாம்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg மோர், இளநீர், பழச்சாறுகள் உஷ்ணத்தைக் குறைக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வெயிலின் உஷ்ணத்தால் சருமம் சூடாகிவிடும். இதைத் தடுக்க, அடிக்கடி கர்ச்சீப்பை தண்ணீரில் நனைத்து அடிக்கடி கை, முகம், கால்கள், கழுத்து போன்ற அனைத்து இடங்களிலும் ஒத்தி எடுக்கலாம். இதனால், தோல் வறட்சி, படிந்த அழுக்கும் நீங்கி, குளிர்ச்சியாக இருக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg உஷ்ணம், தூக்கமின்மை காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்பட்டுச் சிவக்கலாம். நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை போன்ற ஃப்ரெஷ் பூக்களைக் கண்களில் வைத்து துணியால் கட்டிக்கொள்ளலாம். நல்ல குளிர்ச்சியைத் தரும்.

வலியிலிருந்து விலக...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பஸ், காரில் பயணிக்கும்போது, கை, கால்களை மடக்க முடியாமல் ஒரே நிலையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். அவ்வப்போது எழுந்து, கால்களைச் சுழற்றுவதும், கைகளை சோம்பல் முறிப்பதும், காலைத் தூக்கியபடி வைத்துக்கொள்வதுமாக சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், வலிகள் இருக்காது. நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். வீக்கம் ஏற்படாது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பிரயாணக் களைப்பால் கால் வலி அதிகம் இருக்கும். வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து கால்களை நனைப்பதன் மூலம் பாத வலி பறந்துபோகும்.

பாதுகாப்பு

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg மலை ஏறும்போது, காது அடைப்பதுபோல, குத்துவலிபோல ஏற்படலாம்.  வாயில் ஏதேனும் சாக்லேட் மென்றுகொண்டே செல்வதன் மூலம், இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வெயில் கொளுத்தும் இடமாகச் செல்வது என்றால், பருத்தி ஆடையை அணிந்து செல்லுங்கள். அதுவும் தளர்வாக இருக்கட்டும். அதீத வியர்வை, உடல் சோர்வைத் தடுக்கும்.  குளிர் பிரதேசத்துக்கு செல்வதாக இருந்தால், ஸ்வெட்டர், மங்கி கேப், மஃப்ளர் போன்றவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பிளாஸ்டிக்கினால் ஆன செருப்பு, ஹீல்ஸ் அணிவதைத் தவிர்த்து, வசதியான பக்கிள்ஸ் வைத்த செருப்பை அணிவது நல்லது. இதனால் குதிகால், கெண்டைக்கால் வலி வராமல் இருக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பயணிக்கும் வாகனத்தின் குஷன் சீட்டில் அமர்ந்து நெடுநேரம் பயணிக்கும்போது உட்காரும் இடத்தில் உஷ்ணக் கட்டி, பைல்ஸ் வருவதைத் தவிர்க்க, சீட்டின் மேல் பருத்தித் துண்டை விரித்து உட்காரலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பயணிக்கும் குடும்ப உறுப்பினர் அனைவரிடமும், உங்களது செல்போன் நம்பர், டிக்கெட் ஜெராக்ஸ், ரசீது, முகவரிகளைக் கொடுத்து வையுங்கள். சமயத்தில் கை கொடுக்கும். காணாமல் போனாலும், சட்டென அவர்களைத் தேடி இணைவதில் சிரமம் இருக்காது.


கையோடு பையில்...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg அதிக அலைச்சல் மலச்சிக்கலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு 20 காய்ந்த திராட்சைகள் சாப்பிட்டால், காலையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சீரகத்தை தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து குளிப்பது உஷ்ணம், அலைச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வைத் தடுக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg ஒரு பாக்கெட் வெந்தயத்தை வாங்கி எடுத்துச் செல்லுங்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில், தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பருப்பு பொடி, ஊறுகாய், தக்காளித் தொக்கு, புளிக்காய்ச்சல் என்று தயார்செய்து செல்வதன் மூலம் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட ஃபீல் இருக்கும்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg மிளகு சீரகப் பொடி, பருப்புப் பொடி, சுண்டைக்காய்ப் பொடி, புளிக்காய்ச்சல், பொரித்த வடகம் என சில உணவுகளைத் தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. சரியான உணவு கிடைக்காத இடங்களில், வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்லது.  உடலுக்கும் உபத்திரவம் தராது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பிரயாணத்தின்போது சிலருக்கு வாந்தி வரலாம். புளிப்பான எலுமிச்சம்பழம், மாங்காய், ஆல்பகோடா பழம், இஞ்சி மரப்பா இவற்றை எடுத்துச் செல்லலாம். பஸ், கடல் விமானத்தில் பயணிப்பவர்களுக்கென, ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவு இல்லாத 'காக்குலஸ்என்ற மருந்து இருக்கிறது. இதை பயணத்தின்போது கையில் வைத்திருக்கலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg தொப்பி, குடை, கூலிங்கிளாஸ், சன் ஸ்க்ரீன் லோஷன், ஆலுவேரா ஜெல் கிரீம், குக்கும்பர் ஜெல் கிரீம் வாங்கி எடுத்துச் செல்வதன் மூலம் வெயிலின் நேரடித் தாக்குதல் ஏற்படாமல் காக்கலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வெகு தொலைவுப் பயணம் எனில், முதியோர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் அழைத்துச் செல்லாதீர்கள். அப்படியே விரும்பி அழைத்துப் போனாலும், அவர்களுக்கான மருந்து மாத்திரைகள், டானிக் வகைகள், டாக்டரின் மருத்துவ சீட்டு இவற்றையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். குளுகோஸ், வலி நிவாரணத் தைலங்கள் கைப்பையில் இருக்கட்டும்.


http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வழக்கமாக நாம் பயன்படுத்தும் சோப், பவுடர், கிரீம் வகைகளைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். மாற்று பிராண்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அலர்ஜியைத் தவிர்க்க இது உதவும்.

-நன்றி டாக்டர் விகடன், 16.05.2014