Showing posts with label போலியோ. Show all posts
Showing posts with label போலியோ. Show all posts

Saturday, February 18, 2012

போலியோவை விரட்டுவோம்




தமிழகம் முழுவதும் 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு இன்று 19.02.2012 (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் தவணையாக 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் அமைக்‍கப்பட்டுள்ள 40,000-க்கும் மேற்பட்ட முகாம்களில், காலை 7 மணி முதல் மாலை 5 வரை போலியோ சொட்டு மருந்து அளிக்‍கப்படுகிறது.

பயணம் செய்வோருக்கு வசதியாக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில், நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கு இன்று (19.02.2012)  சொட்டு மருந்து அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2-வது தவணையாக வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்.


புதுவை ரோட்டரி நண்பர்கள் வெளியிட்ட வீடியோவைப் பாருங்கள்:

Polio Awareness Film 2012 - Rotary club of Pondicherry, Aurocity - YouTube

Friday, January 14, 2011

போலியோ இல்லா உலகம்

.

ரோட்டரி இன்டர்நேஷனல் தனது நூறறாண்டான 2005 –ஆம் ஆண்டிற்குள் போலியோவை ஒழிப்பதென முடிவெடுத்திருந்தது. இதற்கு ரோட்டடரியுடன் உலக நல ஸ்தாபனம், யுனிசெஃப், அமெரிக்க நோய் கட்டுபாட்டு மையம், பில் கேட்ஸ் நிறுவனம், மற்றும் பல்வேறு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. உலகமெங்கும் போலியோ ஒழிப்பு முழுமையடைந்தாலும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும் இன்னும் முழுமையடையவில்லை. இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ 825 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ரோட்டரி கிளப். இதன் ஒரு பகுதியாக ரோட்டரி மாவட்டம் 2980 சார்பில் நடந்த மாவட்ட மாநாட்டில், நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை சினேகா. விழாவில் பேசிய சினேகா, "போலியோ ஒழிப்பு என்பது இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். என்னுடைய அப்பாவும் ஒரு ரொட்டேரியன்தான். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததை பெருமையாகக் கருதுகிறேன். போலியோ ஒழிப்பு என்ற நோக்கத்துக்கு ஒவ்வொருவரும் தம்மாலான தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும்..", என்றார்.  இதில் தானே முதல் நபராக ரூ 15000 கொடுத்து போலியோ ஒழிப்புக்கான நிதி திரட்டலைத் தொடங்கிவைத்தார் சினேகா.


நாடு முழுவதும் இளம்பிள்ளை வாத தடுப்பு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான முகாம் வரும் ஜனவரி 23-ம் தேதியும், பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்க இருக்கிறது. சிறு நோய்களான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ கிருமிகள் பரவுவதை தடுத்து போலியோ நோய் இல்லை என்ற நிலையை இந்தியாவில் உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அப்பொழுது 5-வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க நாம் அனைவரும் ஒத்துழைப்பு தருவோம்.

போலியோ தடுப்பு சொட்டு மருந்து நாட்கள்: 23.01.2011, 27.02.2011