Showing posts with label மருத்துவ படிப்பு. Show all posts
Showing posts with label மருத்துவ படிப்பு. Show all posts

Wednesday, May 9, 2012

நீங்களும் மருத்துவராகலாம்

எம்.பி,பி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள்
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்: 06.06.2012


மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ்,.பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 15-.௦05.2012 ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் எம்.பி.பி.எஸ்.-பி.டிஎஸ். (பல் மருத்துவம்) ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்படும். வரும் 30-05.2012-ம் தேதி மாலை 3 மணி வரை பெற்றுக்கொள்ளலாம், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசித்தேதி ஜூன் 2-ம் தேதி எனவும் , ஜூன் 20-ம் தேதி தர வரிசை மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், ஜூலை 2-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எங்கு கிடைக்கும்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். விண்ணப்பம் விநியோகிக்கப்படும் 

எத்தனை இடங்கள்: 

இந்த ஆண்டு 200 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல் படும்.

தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு: