Saturday, February 18, 2012

போலியோவை விரட்டுவோம்




தமிழகம் முழுவதும் 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு இன்று 19.02.2012 (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் தவணையாக 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் அமைக்‍கப்பட்டுள்ள 40,000-க்கும் மேற்பட்ட முகாம்களில், காலை 7 மணி முதல் மாலை 5 வரை போலியோ சொட்டு மருந்து அளிக்‍கப்படுகிறது.

பயணம் செய்வோருக்கு வசதியாக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில், நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கு இன்று (19.02.2012)  சொட்டு மருந்து அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2-வது தவணையாக வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்.


புதுவை ரோட்டரி நண்பர்கள் வெளியிட்ட வீடியோவைப் பாருங்கள்:

Polio Awareness Film 2012 - Rotary club of Pondicherry, Aurocity - YouTube

Sunday, January 15, 2012

தானே..தானே..வந்தானே..


 கோரத்தாண்டவம் ஆட...

  வழக்கம் போலத்தான் இந்த வானிலை அறிக்கையும் பொய்யாகப்போகும் என்றுதான் அனைவரும் நேற்று (29.12.2011) இரவு வரை நம்பிக்கொண்டு இருந்தனர்.

    ஒரு வாரமா, ரமணன் சும்மா..சும்மா “ தானே..தானே..ங்கிறார். புயல் வருகிற மாதிரி கொஞ்சம் கூட அறிகுறியே இல்ல. வெளியில பாருங்க சார், வானம் எவ்வளவு தெளிவா இருக்கு..இப்படித்தான் தொலைகாட்சி பார்த்தவர்கள் அத்தனை பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ரமணன் சளைக்கவேயில்லை. தெளிவாக புயல் பற்றி, அதன் முன்னேற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். நாகப்பட்டினத்திற்கும், சென்னைக்கும் இடையே 30௦-ம் தேதி காலை கரையை கடக்கும். மழையும், காற்றின் வேகமும் மிக அதிகமாக இருக்கும் என்று சொன்னார். கடலூரில் இதுவர இல்லாத அளவிற்கு மிகவும் உச்ச கட்ட போல் எச்சரிக்கை கூண்டு 10-ம் எண் ஏற்றப்பட்டது.
தொலைகாட்சி நிருபர்கள் ஒவ்வொரு இடமாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பொது மக்களிடம் கேட்டு செய்திகள் தந்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த பிறகுதான் மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு ஏற்பாடுகளை வியாழன் மாலை முடுக்கி விட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

    நெய்வேலியில் (எங்கள் ஊர்) இதற்கென எந்த சவாலையும் எதிர் கொள்ள நகர நிர்வாகம் ஒரு அவசர கால கட்டுப்பாட்டு அறையை ஏற்பாடு செய்தது. ௩௦௦-ம் தேதி வெள்ளிகிழமை காலை நான்கு மணி முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. அச்சுறுத்தும் வகையில் காற்றின் வேகமும், சத்தமும் இருந்தது. 04.30௦ மணிக்கு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக இல்லாதது, மின்சாரத்தை நிறுத்தி வைப்பது. எந்த தொலைபேசியும் இயங்கவில்லை, ஒன்றே ஒன்றைத்தவிர, BSNL தரை வழிச்சேவைக்கு நன்றி. அதனால்தான் செய்திகளை பிற இடங்களிலிருந்து தெரிந்து கொள்ளவும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

    காலை எட்டு மணிக்கு 10 நிமிட இடைவேளை. அப்பொழுது சில படங்கள் எடுக்க முடிந்தது. அதன் பின்னர் மீண்டும் காற்று சுழற்றி சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இம்முறை மழையும் சேர்ந்து கொண்டது. ஏற்கனவே பாதி மரங்கள், கிளைகள் முரிந்த நிலையில் இருந்தது. இம்முறை மரங்கள் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வேரோடு பெயர்ந்தும், முறிந்தும் விழ ஆரம்பித்துவிட்டன. மின்கம்பங்களும் சில இடங்களில் சரிந்து விழுந்தன.

     காலை 11- மணிக்கு எல்லாம் முடிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் தரையில் விழுந்த மரங்கள். சாலைகளில் அனைத்திலும் மரங்கள். மனித நடமாட்டம் முற்றிலும் இல்லை.

    நிலைமை சீராக பல நாட்கள் பிடிக்கும். சாலைகள் சரியாக வேண்டும். மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட வேண்டும்.
இயல்பு வாழ்க்கையை நெய்வேலியில் பார்ப்பது எப்போது. இழந்த பசுமையை கொண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம். 
   
கடலூர்- புதுவை இடையே கரையைக் கடந்தது புயல்-140 கி.மீ வேகத்தில் கடும் சூறைக்காற்றுடன் கன மழை.
படங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.






Saturday, December 24, 2011

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ். மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள். உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. 

ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். 
ஆனால் அடிப்படை உணர்வு ஒன்றுதான். 

 உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் “நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்களில் மினுக்கும் விளக்குகள் காய்த்துச் சிரிக்கும். தேவ புதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும். உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று “கேக்” போன்ற இனிப்புகளுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள். 

இந்த இனிய நாளில் எங்கும் மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கிப் பெருகுகிறது. சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன். 

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர். நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 

 இதனை திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே போய் இப்படி சொல்கிறார்.

 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்.


நமக்கு துன்பம் செய்தவர்களை கூட, அவர்கள் வெட்கப்படும் படி நன்மை செய்வதாகும் என்கிறார். பின்னர் அவர்கள் நமக்கு செய்த தீமைகளையும், நாம் அவர்களுக்கு செய்த நன்மைகளையும் மறந்துவிட வேண்டும் என்கிறார்.

ஆம், நமது மனதினை சுத்தப்படுத்தி, மனதினை மிகவும் விசாலமாக்கும் விழாக்காலம் இது. வரும் புத்தாண்டு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பல்வேறு வெற்றிகளையும் வாரி வழங்கட்டும். 

இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



Monday, October 24, 2011

World Polio Day, see how you can help

On World Polio Day, 24 October, Rotarians around the globe show their support for ending the disease, which still strikes young children in Asia, Africa, and the Middle East.

ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்


       தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

       'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.


அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒற்றுமையாய் தீபத்திருநாளை கொண்டாடுவோம்.

Friday, October 21, 2011

RID 2980 EVENTS

தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

Saturday, October 1, 2011

நிம்மதி.. நிம்மதி..


இந்திய தொலைத் தொடர்பு  ஒழுங்கு முறை  ஆணையம்  (TRAI) அண்மையில் இந்தியாவில் எஸ்.எம்.எஸ் துறையில் புதிய விதிகளை வெளியிட்டது.

இந்த கட்டுப்பாடுகள் நுகர்வோருக்கு உத்தியோகப் பூர்வமற்ற வர்த்தக  SMS  அனுப்புவதை  தடுத்து வடிவமைக்கப் பட்டுள்ளன.

செப்டம்பர் 27 2011, முதல் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் சேவை வழங்கும்  நிறுவனமும் புதிய TRAINCPR (தேசிய  வாடிக்கையாளர்  விருப்பம்  பதிவு  NCPR)) வழிகாட்டுதல்கள்  படி நடந்து கொள்ள வேண்டும். புதிய  TRAI   வழிகாட்டுதல்கள் பற்றி மேலும் விவரங்களுக்கு  www.nccptrai.gov.in தளத்தினைப் பார்க்கவும்.

இணைய வழி SMS துறையில் முதன்மையாக விளங்கும் way2sms செப்டம்பர்  27 முதல்  TRAI  விதிமுறைகளை  பின்பற்றுகிறது.

  • இனி பதிவு செய்யப்பட்ட (DND) மொபைல் எண்களுக்கு இணைய வழி SMS வழங்க முடியாது. அந்த சமயத்தில் செய்தி அனுப்புபவர்களுக்கு இங்கு காண்பிக்கப்பட்டது போன்ற செய்தி கிடைக்கும்.





  •   இனி அனுப்புபவர் பகுதியில் TD- 677800 (677800 is the Unique number allotted by Telecom operator to way2sms) என்ற எண் மட்டும் இருக்கும். பின்னர் எட்டு எழுத்துக்களில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் இடம் பெறும்.
  •     மேலும் TRAI புதிய விதிகளின் படிஒவ்வொரு நாளும்  இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை செய்திகள் அனுப்ப இயலாது. 





TRAI-ன் புதிய விதிகள் ஒரு வகையில் நிம்மதி அளித்தாலும் என் போன்றவர்களுக்கு சற்று சிரமம்தான். எப்பொழுதும் இணையத்தின் வழிதான் குறுஞ்செய்தி அனுப்புவது வழக்கம். பார்ப்போம் ஒரு கதவு மூடினால் கண்டிப்பாக இன்னொன்று திறக்கும்.